மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: சுற்றுலாத் துறையில் பில்லியன் கணக்கிலான இழப்பு எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாத் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
'டூரிஸம் எகனொமிக்ஸ்' (Tourism Economics) நிறுவனம் நேற்று(03.03.2026) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த மோதல் நீடித்தால் 2026 ஆம் ஆண்டில் இப்பிராந்தியத்திற்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11% முதல் 27% வரை குறையக்கூடும்.
சஜித் மற்றும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்டுள்ள இணக்கம்
சுற்றுலாத் துறையில் ஏற்படும் வீழ்ச்சி
கடந்த டிசம்பர் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 13% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போர்ச் சூழலால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்த வீழ்ச்சியால் சுமார் 2.3 கோடி முதல் 3.8 கோடி வரையிலான சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவதைத் தவிர்க்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அந்த நாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் சுமார் 34 பில்லியன் டொலர் முதல் 56 பில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக துபாய், சவுதி அரேபியா போன்ற சுற்றுலாத் தலங்களை அதிகம் நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் இந்த வார காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri