பொத்துவிலில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

Ampara SL Protest Sri Lanka Police Investigation
By Rakesh Jun 28, 2023 10:13 AM GMT
Report

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் - அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அறுகம்பை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று(28.06.2023) காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றுள்ளனர்.

ஜீவனோபாயம் பாதிப்பு

பொத்துவிலில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்! | Tourism Place Protest Sri Lanka Pothuvil

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப் பயணிகளின் நீர்ச் சறுக்கல் படகுகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர்.

இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முச்சக்கரவண்டி சாரதிகள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

சட்ட நடவடிக்கை

பொத்துவிலில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்! | Tourism Place Protest Sri Lanka Pothuvil

இதற்கமைய தமது பிரச்சினையை போக்குவரத்து பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ச் சறுக்கல் படகுத் தாங்கிகளை அகற்றி வீதி விபத்துக்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் பாதுகாத்து தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு செல்வதற்குப் பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி மகஜர் ஒன்றையும் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US