விஎப்எஸ் குளோபலுக்கு எதிராக நீதிமன்றை நாடியுள்ள சுற்றுலா அமைப்புக்கள்
பயனர்களிடையே, குறிப்பாக சுற்றுலாப் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்திய, சிக்கலான புதிய விசா செயலாக்க முறைமை தொடர்பிலான தீர்வுக்காக உயர்நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை முதன்முறையாக அதிகரித்துள்ளது என்று சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன்; 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் வருகைகள் இலக்குகளை தாண்டி சென்றது.
விசா செயலாக்க முறை
எனினும்; 2024 ஏப்ரல் நடுப்பகுதிக்குப் பின்னர், இலங்கை, சர்ச்சைக்குரிய விஎப்எஸ் குளோபல் விசா (VFS Global) முறையை அறிமுகப்படுத்தியபோது, பயணிகளின் வருகைகள் 2017 இன் நிலைகளுக்குக் கீழே குறைந்தன.
மே மற்றும் ஜூன் மாதங்களில் 2015 இன் நிலைகளுக்குக் கீழே தொடர்ந்து வீழ்ச்சியடைந்தததாக சுற்றுலா பயணத்துறையின் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சிக்கலான விசா செயலாக்க முறையின் தாக்கம் குறித்து அதிகாரிகளுடன் பலமுறை விவாதித்த போதிலும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம், இலங்கை ஹோட்டல்கள் சங்கம், சுற்றுலாத்துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கை தொழில்முறை மாநாட்டு கண்காட்சி அமைப்பாளர்கள் சங்கம், சிலோன் ஹோட்டல் கல்லூரி பட்டதாரிகள் சங்கம் மற்றும் இலங்கை பயண முகவர்கள் சங்கத்தின் ஆதரவுடன் சுற்றுலாக் கூட்டமைப்பு என்பன அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        