நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று(28.09.2023) முதல் ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் போது பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை
மேலும், தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
