நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்! சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தகவல்
நுவரெலியாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொழுதுபோக்கு மேம்படுத்தல்
இதுகுறித்து பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், உலகின் புகழ்பெற்ற இசைக் குழுக்களை இலங்கைக்கு வரவழைத்து இரவில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கையும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



