வெளிநாட்டவருக்கு எதிராக எடுக்கப்போகும் சட்ட நடவடிக்கை
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் கண்காணித்து வருகிறது.
களங்கம் விளைவித்தல்
வெலிகம சுற்றுலா வலயத்தில் உள்ளூர் நபருடன் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளியை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ளமை குறித்து எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காணொளி பதிவேற்றம்
நீதியாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அந்த காணொளி நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர் ஒருவர் ஒரு பெண்ணை தவறான வகையில் துன்புறுத்துவது தொடர்பாக இணையத்தில் சமீபத்தில் பரவிய மற்றொரு காணொளி குறித்தும் பணியகம் கவலை தெரிவித்துள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam