நற்பிட்டிமுனை பகுதியில் வீதியோர மீன் வியாபார நடவடிக்கைக்கு முற்றாக தடை (PHOTOS)
அம்பாறை - நற்பிட்டிமுனை பகுதியில் அனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீன் வியாபார நடவடிக்கையை முற்றாக தடை அதிகாரிகளினால் தடை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில், இன்று (2) காலை கல்முனை மாநகர சபை வியாபார நடவடிக்கைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய மாநகர சபையின் அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் எவ்வித அனுமதியுமின்றி மீன் விற்பனை செய்யப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ள விடயத்தை மாநகர சபை அதிகாரிகள் மீன் விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன், வீதிகளில் மீன்களை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கையும் வழங்கியுள்ளனர்.