சவுதியில் மனைவிக்கு நடந்த கொடூரம்: கணவன் எடுத்த விபரீத முடிவு
வீட்டு வேலைக்காக சவுதி சென்ற மனைவி கொடூர துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தம்புள்ளை அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபரே நேற்று (07) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை நகரில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
இதன்போது வீட்டு உரிமையாளரினால் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை சந்திக்க நேரிட்டதாகவும், வீட்டு உரிமையாளரின் மகன் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
வெளியான காரணம்
இதனை வீட்டின் உரிமையாளரிடம் கூறியதையடுத்து, 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி அறையில் அடைக்கப்பட்டதாகவும், கழிவறையில் தண்ணீர் குடித்து தான் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சவுதி தூதரகம் மற்றும் சவூதி பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி தகவல் வழங்கியுள்ளார்.
இதன்போது சவுதி பொலிஸாரின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட பெண் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நாடு திரும்பிய தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றதன் பின்னர் நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் தெரிவித்ததாகவும், அவர் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |