முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ குவிப்பின் மத்தியில் இடம்பெற்ற சித்திரவதை! அச்சத்தில் மக்கள் (Video)
மாவீரர் தின வாரம் ஆரம்பமானதிலிருந்து கடந்த ஒரு வாரமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் புதிய பொலிஸ் காவலரன்கள் முள்ளிவாய்க்காலை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன என முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குமணன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் நினைவு தினத்தில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடைய உண்மைத் தன்மைகளையும் இராணுவத்தினருடனான முறுகல் நிலை எந்தப் பகுதியில் இடம்பெற்றது, இராணுவத்தினர் ஏன் இவ்வகையான தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தொடர்பில் ஆராய வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.
இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர், அதன் பின்புலம், மாவீரர் தின நினைவேந்தல் அனுஷ்டிப்புக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது அங்கிருக்கக் கூடிய இராணுவ பொலிஸ் கெடுபிடிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவை தொடர்பில் எமது செய்தியாளர் குமணம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவருடனான விசேட நேர்காணல் இதோ,
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam