கனடாவில் அதிக கேள்வியுடைய தொழில்கள்: வெளியான தகவல்
கனடா - ரொறன்ரோ(Toronto) பகுதியில் அதிகளவு கேள்வியுடைய தொழில்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் தொழிலாளர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர்.
கேள்வியுள்ள தொழிற்துறைகள்
ரொறன்ரோவில் சராசரி சம்பளங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் மொன்பொருள் பொறியியலளார் , தரவு ஆய்வாளர், தரவு விஞ்ஞானி, பதிவு செய்யப்பட்ட தாதி, நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், செயற் திட்ட முகாமையாளர், மனித வள முகாமையாளர், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் மற்றும் மின்பொறியியலாளர் உள்ளிட்ட தொழில்களுக்கு அதிகளவு கேள்வி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சராசரியாக 65,000 டொலர்கள் முதல் 130,000 டொலர்கள் வரையில் வருடாந்த சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் இந்த ஒவ்வொரு தொழிற்துறைகளிலும் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரையிலான வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கனடாவின் வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் பலர் ரொறன்ரோவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |