அநுரவை சந்தித்த ஐ.நாவின் உயர் அதிகாரி: அரசாங்க உயர்மட்டம் வியப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர், ஜேவிபியின் தலைவரை சந்தித்தமை ராஜதந்திர மற்றும் அரசாங்க உயர்மட்டத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூதுவர்கள் இராஜதந்திர நெறிமுறைகள் மீதான வியன்னா உடன்படிக்கைக்கு அப்பால் சென்று அத்தகைய நடத்தையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
எனினும் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி ஒருவர் அவ்வாறு செயற்பட்டமை விரும்பத்தக்க செயலல்ல என்று அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி நிச்சயமாக ஒரு புதிய முன்னுதாரணத்தை காட்டியுள்ளதாக அரசாங்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நெறிமுறையைப் பற்றி பேசுகையில், அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் கூட நெறிமுறையில் தவறிய சம்பவங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி போல் இருக்கிறேன்
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜனாதிபதி, வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் ஒருவரின் இல்லத்தில் தனிப்பட்ட இரவு விருந்துக்கு சென்றார்.
இந்த செய்தி வெளியானதும், நான் டெம்பிள் ட்ரீஸில் கைதி போல் இருக்கிறேன். நான் பிரியாணி சாப்பிட செல்ல விரும்பினேன். அதிலென்ன பிழை?' என்று கேட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஏனைய நாடுகளின் தேசிய தின விழாக்களில் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து
கொள்கின்றனர், சமீபத்தில் ஒரு வெளிநாட்டு தூதர் உரையாற்ற வந்தபோது இராணுவ உயர்
அதிகாரிகள் எழுந்து நின்றனர் என்ற விடயத்தை ஆங்கில ஊடகம் நெறிமுறை தொடர்பில்
சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
