பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம்! - முக்கிய நபரின் மகன் கைது (செய்திப் பார்வை)
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் மற்றும் பெண் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் ஹபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில் அப்பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு நேற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமையை பொறுப்பேற்க சென்ற நிலையில் பாடசாலை சமூகத்திற்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதேவேளை, ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி ஊடகங்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.