சட்ட மா அதிபரின் பரிந்துரையை புறக்கணித்த ஜனாதிபதி
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோவால் முன்மொழியப்பட்ட மூன்று மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவால்(Parinda Ranasinghe) பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை, அவர் அனுப்பவில்லை.
சட்டமா அதிபரின் பரிந்துரை
இந்தநிலையில், வெற்றிடங்களை நிரப்ப கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. பிரேமசங்கர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |