ஈரானின் மற்றுமொரு IRGC உயர் அதிகாரியும் பலி! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப்படையின் (IRGC) கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை அண்மித்துள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இருப்பினும், ஈரான் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூட அவர் முன்மொழிந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2018-ல் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப்படையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 2010 முதல் கடற்படையின் துணைத்தளபதியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த தாக்குதலில் பல மூத்த ஈரானிய கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri