இஸ்ரேல் காவலில் இருந்த ஹமாசின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
இஸ்ரேல் (Israel) காவலில் இருந்த, பாலஸ்தீன மேற்குக் கரையின் ஹமாஸ் (Hamas) தலைவர் மரணமடைந்ததாக பாலஸ்தீன அரச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
63 வயதான முஸ்தபா முஹம்மது அபு அரா (Mustafa Muhammad Abu Ara), என்பவரே தெற்கு இஸ்ரேலில் உள்ள ராமோன் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், மரணமடைந்ததாக பாலஸ்தீனிய கைதிகள் விவகார ஆணையகம் தெரிவித்துள்ளது.
உடல்நலப் பிரச்சினை
கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் அத்துடன், அவருக்கு தீவிர மருத்துவப் பின்தொடர்தல் தேவைப்பட்டது.
இருப்பினும், அவர் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து, அனைத்து கைதிகளையும் போலவே, நடத்தப்பட்டார்
இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட அபு அரா, சித்திரவதைக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையையும் இழந்ததாக பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய காவல்
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் அக்டோபர் 7 ஆம் திகதி, காசா போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய காவலில் இறந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் கடந்த மாதம் தெரிவித்தது.
இதற்கிடையில் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி போரில் இதுவரை 39,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் சண்டையால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |