இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள சீன உயர் அதிகாரி
சீன கம்யூனிஸக்கட்சி மத்திய குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினரும், (CPC Chongqing) மாநகரக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜுன், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று (19.07.2023) விஜயம் செய்யவுள்ளதாக இவர் எதிர்வரும் (23.07.2023) ஆம் திகதி வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தை இலங்கைக்கான சீன தூதரகம் உறுதிசெய்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய கவனம்
இவர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
மேலும் அவர் சீன கம்யூனிஸக்கட்சியின் 17வது மத்திய குழுவின் மாற்று உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இலங்கைக்கான சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் அவர் முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |