ஐபிஎல் 2025 சீசனில் அணிதலைவர்கள் வாங்கும் சம்பளம்: முதலிடத்தில் உள்ள வீரர்
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகின்றன.
அதற்கமைய ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான அணித்தலைவரை அறிவித்துள்ளன.
இந்த சூழலில் ஐபிஎல்(IPL) தொடரில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அணித்தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
அந்த வகையில் நடப்பு தொடரிலிலுள்ள அணித்தலைவர்களின் சம்பளம் எவ்வளவு என பார்க்கலாம்.
முதலிடம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் லக்னோ அணியின் புதிய தலைவர் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பஞ்சாப் அணியின் புதியஅணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
கே கே ஆர் அணிக்கு செம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்ததால் ஸ்ரேயஸ் மதிப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதன் மூலம் அவர் 26 கோடியே 75 லட்சம் சம்பளத்தை பெறுகிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ்(SRH) அணிதலைவர் பெட் கம்மின்ஸ் உள்ளார்.
பெட் கம்மின்ஸ் 18 கோடி ரூபாய் சம்பளத்தை பெறுகிறார்.
சிஎஸ்கே அணிதலைவர்
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் சிஎஸ்கே(CSK) அணிதலைவர் ருதுராஜ்(Rutu Raj) உள்ளார்.
ருதுராஜ் 18 கோடி ரூபாய் சம்பளத்தை பெறுகிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான்(RR) அணிதலைவர் சஞ்சு சாம்சன்(Sanju Samson) உள்ளார்.
சஞ்சு சாம்சன் 18 கோடி ரூபாய் சம்பளம் பெற்று அணிதலைவர் செயல்பட உள்ளார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் டெல்லி அணியின் புதிய அணிதலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் அக்சர் பட்டேல் உள்ளார். அக்சர் பட்டேல் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் சுப்மன் கில் இருக்கின்றார்.
குஜராத் அணியின் அணிதலைவர் செயல்படும் கில் 16 கோடியே 50 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
பத்தாவது இடம்
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணிதலைவர் ஹர்திக் பாண்டியா உள்ளார்.
ஹர்திக் பாண்டியா 16 கோடியே 35 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஆர் சி பி அணியின் புதிய அணிதலைவர் ரஜத் பட்டிதார் உள்ளார். தற்போது 11 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றார்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கே கே ஆர் அணிதலைவர் ரஹானே.
ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளம் வாங்கும் அணிதலைவர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். ரஹானே ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
