20 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட அரச குடும்பத்தின் கல்லறைகள்
லண்டனில் உள்ள வின்ட்சர் கோட்டை மைதானத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் அமைந்துள்ள அரச குடும்பத்தின் கல்லறைகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (19ம் திகதி) திறக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்வதற்காக கடைசி கல்லறை திறக்கப்பட்டது. ராணியின் தாயாரின் உடலும், ராணி எலிசபெத்தின் தந்தை மன்னர் ஜோர்ஜ் VI இன் உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ராணியின் உடலுடன் இளவரசர் பிலிப்பின் உடலும் அடக்கம்
ராணியின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த போதிலும், அவரது உடல் அடக்கம் செய்வது தாமதமானது.
இந்நிலையில், ராணியின் உடலுடன் இளவரசர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பிரித்தானிய அரச மரபுப்படி, மகாராணியின் நான்கு பிள்ளைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam