இலங்கையில் உச்சம் தொட்ட தக்காளி விலை
உள்ளுர் சந்தையில் மலையக மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகள் அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி வகைகளின் விலைகளை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை ரூ 650 ரூபா முதல் 700 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறிகள் குறைந்த விளைச்சலுக்கு முக்கியக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.