விதுர விக்ரமநாயக்க தலைமையில் குருந்தூர் மலை குறித்து இன்று முக்கிய பேச்சு
முல்லைத்தீவு - குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அபாயமுள்ளது எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின்போது யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் அரசியல், சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தரப்பு துறைசார்ந்தவர்களை குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சிகளின் போது, ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
