காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (25) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam