பலத்த காற்று நிலைமை தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை அறிவிப்பு
நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

High Voltage Tracks கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் TRPயில் மாஸ் காட்டியது எது... டாப் 5 விவரம் இதோ Cineulagam
