வறட்சியான வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றம்!
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சீரான வானிலை
எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மழை
இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
