மக்கள் பல இலட்சங்களை பெறுவதற்கான வாய்ப்பு! பொலிஸ் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு
சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெகுமதிகள் அதிகரிப்பு
இதன்படி, ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
வாய்ப்பு
சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் பொலிஸாருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri