யாழ். உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
நாட்டின் நிலவும் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (26.05.2023) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
* அனுராதபுரம் - பிரதானமாகச் சீரான வானிலை
* மட்டக்களப்பு - மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
* கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
* காலி - அடிக்கடி மழை பெய்யும்
* யாழ்ப்பாணம் - பிரதானமாகச் சீரான வானிலை
* கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
* நுவரெலியா - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
* இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
* திருகோணமலை - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
* மன்னார் - பிரதானமாகச் சீரான வானிலை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
