நாட்டின் அநேக பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தாழமுக்க நிலை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 46 நிமிடங்கள் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri