டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(07) நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த வாரம் 292.49 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 292.51ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், கடந்த வாரம் 301.04 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 301.14 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381.59 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 395.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.16 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 335.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.38 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 215.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 190.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |