மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட சாமர
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(Chamara Sampath Dassanayake) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் இன்று(7)காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் சாமர சம்பத் தசநாயக்க கைதானார்.
அதனை தொடர்ந்து கடந்த 1ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் இன்று முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை,அடுத்த 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |