மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது! - அருந்திக பெர்னாண்டோ இராஜினாமா (செய்திப் பார்வை)
யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் தெரிவிப்பது என்னவெனில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்பதுடன், மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாக கூறினார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டு நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தாம் பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி ஊடகங்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.