பேலியகொட மீன் சந்தையின் இன்றைய விலை நிலவரம்! (Video)
பேலியகொட மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களின் விலை சராசரியாக காணப்படுவதாக கடலுணவு விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“வழமை போன்று இன்றைய தினத்திலும் எமது மொத்த வியாபாரத்தை ஆரம்பித்தோம், மீன் வகைகளின் விலைகள் சராசரியான வகையில் காணப்படுகின்றது. ஆனால் பெரிய மீன் வகைகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
கொப்பரத், தலபத், பரல், தோறு ஆகிய மீன்களின் விலைகள் அதிகமாக உள்ளன. சிறிய மீன் வகைகளின் விலைகளும் குறைந்துள்ளன. போல்லோ 350 ரூபாவாகவும், கும்பலோ 400 ரூபாவாகவும், உருல்லோ 450 ரூபாவாகவும், லின்னோ 350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இறால் 800 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. நண்டு 1400 ரூபா தொடக்கம் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கணவாய் 1000 ரூபா வரை விற்கப்படுகிறது.
பலயா 450 ருபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நாட்களில் மீன் வகைகளின் அளவு குறைந்துள்ளது அதனாலேயே விலைகள் சற்று உயர்ந்துள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
