தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய ஆபத்து! - சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்)
இலங்கை தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் காணிச் சூறையாடல்தான் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் பாராதூரமான ஆபத்தாகும்.
எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கூடுகின்றது போது, மீறல்கள் பற்றி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான தனது கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென்பதையும் அம்மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரே உறுதியான வழியாக தமிழ் தேசியப் பிரச்சினையைக் கையாண்டு தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.