மரக்கறிகளின் இன்றைய சந்தை நிலவரம்! - மொத்த சந்தையிலும் சடுதியாக விலை உயர்வு (Video)
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் விற்பனை செய்யப்படும் என மரக்கறிகளின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய மரக்கறிகளின் விலை நிலவரம்
போஞ்சி ஒரு கிலோ - 250 முதல் 500 ரூபா வரை
கரட் ஒரு கிலோ - 250 முதல் 450 ரூபா வரை
கோவா ஒரு கிலோ - 300 முதல் 400 ரூபா வரை
தக்காளி ஒரு கிலோ - 400 முதல் 500 ரூபா வரை
கறி மிளகாய் ஒரு கிலோ - 700 முதல் 750 ரூபா வரை
மிளகாய் ஒரு கிலோ - 650 முதல் 700 ரூபா வரை
ராபு ஒரு கிலோ - 180 முதல் 200 ரூபா வரை
கண்டங்கத்தரிக்காய் ஒரு கிலோ - 200 ரூபா
வெண்டைக்காய் ஒரு கிலோ - 200 ரூபா
சின்ன வெங்காயம் ஒரு கிலோ - 1200 ரூபா
மாங்காய் ஒரு கிலோ - 40 முதல் 50 ரூபா
வட்டக்காய் ஒரு கிலோ - 50 முதல் 60 ரூபா
கத்தரிக்காய் ஒரு கிலோ - 200 முதல் 350 ரூபா
லீக்ஸ் ஒரு கிலோ - 300 ரூபா
பீட்ரூட் ஒரு கிலோ - 200 ரூபா
