வன்னியில் இருந்து மீட்கப்பட்ட தங்கங்களுக்கு என்ன நடந்தது: கஜேந்திரன் எம்.பி கேள்வி(Video)
2009 ஆம் ஆண்டு வன்னி பகுதியிலிருந்து மீட்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான தங்கங்களின் நிலை என்ன? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் ஏன் இதுவரை அந்த தங்கங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்று(113.12.2023)உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்கங்கள் அனைத்தும் உரியவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் குறிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அவை இருந்ததாக அரசாங்கமே வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
அவ்வாறு கைப்பற்றப்பட்ட அந்த தங்க நகைகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இன்றுவரை காத்திருக்கின்றனர்.
ஆனால் இன்றுவரை அந்த தங்க நகைகள் மக்களுக்கு கையளிக்கப்பட்ட வில்லை. மிகவும் நேர்த்தியான முறையில் உரிமையாளரின் பெயர், முகவரி குறிப்பிடப்பட்டு கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளின் நிலை என்ன? ஏன் அவை உரியவர்களிடம் இதுவரை ஒப்படைக்கப்பட்ட வில்லை? என செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு - கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உடற்கூற்று மாதிரிகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |