கோரம் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
கோரம்(நாடாளுமன்ற விவாதத்தை முன்னெடுக்க போதிய உறுப்பினர்கள் இன்மை) இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை(12) காலை 09.30 வரை ஒத்திவைக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வு..
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முன்னர் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் சுவசேரிய எனப்படும் நோயாளர் காவு வண்டி சேவை ஆகியவற்றுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் விரி விதிக்கப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |