மற்றுமொரு ஆலயம் அழிப்பு! வீதியில் வீசப்பட்ட அம்மன் விக்கிரகம்
திருகோணமலையில் வெருகல் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்து தற்போது அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள மலைநீலி அம்மன் ஆலயத்தின் காணிகள் தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது பௌத்ததிற்குரிய பகுதியாக உரிமை கோரி அப்பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
போரால் இடம்பெயர்ந்த மக்கள் 2007 ஆம் ஆண்டு மீள் குடியமர்ந்த போது அந்த ஆலயம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயத்தின் இடிபாடுகளை அகற்றி அம்மனின் விக்கிரகம் வீதியில் வீசப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



