இன்று மின் துண்டிப்பு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
விசாகப் பூரணை தினம் காரணமாக நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் மேலும் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி இன்றும், நாளையும் மதுபானசாலைகள் மூடப்படுவதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 244 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 4 கட்டங்களின் கீழ் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
