இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 10 பேர் வைத்தியசாலையில் (Photos)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் இன்று (02.11.2022) காலை நேர்ந்துள்ளது.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டனிலிருந்து சென்ற தனியார் பேருந்தும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 10 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸார் விசாரணை
இதில் பாடசாலை மாணவர்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழு ஒன்றும் அடங்குகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.




அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
