அக்கராஜன் மன்னனின் நினைவு தினம் தினம் அனுஷ்டிப்பு
அக்கராஜன் மன்னரின் நினைவு தினம் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தினம் இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு
வன்னிப் பகுதியை ஆண்டதாக கூறப்படும் மன்னர் அக்கராஜனுக்கு கரைச்சி பிரதேசசபையினால் அக்கராஜன் சந்தியில் கடந்த 2018.07.05 சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிலை வைக்கப்பட்ட தினத்தில் நினைவு நாள் கொண்டாடப்படுவது வழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.






முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
