மாறாத வடு! முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நாள் இன்று (Video)
30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த நாள் மே 18 இன்றாகும்.
முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலையின் குறியீடு. 21ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கெதிரான மிகப் பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்து இன்றுடன் 13 வருடங்கள் ஆகிறது.
தமிழர் தேசத்தின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் விடுதலை தாகத்திற்கு தக்கசான்றாகும்.
1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கையெது மெய்யெது என்று தெரியாத சதை குவியல்களாக உயிரிழந்தவர்களின் வலிகள் சுமந்த நாள் இன்று.
இந்நாள் இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது.
தமிழீழம் என்கின்ற தணியாத இலட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும், சுமக்கத் தயாராகிய மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வை யாராலும் மறக்க முடியாது.
அவ்வாறு வலி சுமந்த கதையை கண்ணீருடன் பதிவு செய்யும் எமது மக்களின் கதறல்கள் காணொளி வடிவில் இதோ,

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
