தங்க விலையில் பதிவாகியுள்ள மாற்றம்
கடந்த சில வாரமாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வரும் நிலையில், இன்றையதினம் (20) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,585 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 28,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 226,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை
இதேவேளை கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 214,500 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 198,400 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் (17) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 216,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 199,800 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,705.29 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam