150000 இற்கு கீழ் குறைந்த தங்கத்தின் விலை! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் (31.05.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 149,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரம்
அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு நிலவரத்தின் அடிப்படையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கையில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் காரணி
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
