ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி:இன்றைய நாணயமாற்று விகிதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாவின் பெறுமதி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாறாமல் உள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 396.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 381.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 460.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 443.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
