இலங்கையில் டொலர் விலையை 360 ரூபாவிற்கு கீழ் குறைக்க ஆலோசனை
வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 360 ரூபாவிற்கும் கீழே கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் வர்த்தகங்களை காப்பாற்ற தற்போதைய பாரிய வட்டி விகிதங்கள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும்.

வட்டி வீதங்கள்
நிதி அதிகாரங்களைக் கொண்ட நாடாளுமன்றம் வட்டி வீதங்களுக்கு வரம்பை விதிக்க வேண்டும். வட்டி வீதங்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் உள்ளூர் வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும்.
மக்கள் வேலைகளை இழக்கத் தொடங்குவார்கள் மற்றும் நாட்டில் வறுமை நிலைகள் வேகமாக உயரும் என்பதால் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூர் வர்த்தகங்கள் உதவியுள்ள அதேவேளை நாட்டின் வீழ்ச்சிக்கு ஒருசில நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளன என தெரிவித்துள்ளார்.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam