சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் கிடைக்கவில்லை - அரசாங்கம்
இலங்கையர்கள் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
600,000 குப்பி தடுப்பூசி சீனாவிலிருந்து இலங்கைக்கு நாளை வரும் என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனினும் ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் இலங்கையை தளமாகக் கொண்ட சீன நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு என்பன இன்னும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதலை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சினோர்பாம் தடுப்பூசியின் 4 ஆம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் ஆங்கில மொழியில் கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே இந்தத் தடுப்பூசியை உலகளவில் பயன்படுத்த உலக சுகாதார மையம், தனது பரிந்துரையை வழங்கவில்லை.
இந்த பரிந்துரைக் கிடைத்ததும் இலங்கையிலும் அதனைப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan