பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிரதி புதன் கிழமை தோறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று ஆபத்தை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, சிறைச்சாலையில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை பகிரங்கப்படுத்திய சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதை சிறை அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தனர்.
அதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வாரத்தில் ஒரு முறை கம்பி இணைப்பு தொலைபேசியை குறுகிய நேரத்திற்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri