கொடூரமாக கொலைசெய்யப்பட்ட கிரிக்கெட் வீரரின் தந்தை: ஒருவர் கைது
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 'கொட்டியா' என அழைக்கப்படும் மலிது லக்மால் என்ற சந்தேக நபரே நேற்று (25) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு ஒன்றும் மீட்பு
29 வயதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரத்மலானை கோனகோவில மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா 2018 மே 24 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேகநபர்
ரஞ்சன் டி சில்வா கொலையுடன் சந்தேக நபர் நேரடியாக தொடர்புடையவர் என்பதும் அங்குலான சயுரு புர அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் தங்கியிருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சின்ஹார அமல் சமிந்த சில்வா என்றழைக்கப்படும் ‘குடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய உறவினரும், பாதாள உலகக் கும்பல் எல்லவல லியனகே தர்மசிறி என்றழைக்கப்படும் ‘பாட்டியா’வின் நெருங்கிய நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 46 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
