மே தின கூட்டத்தை நடத்துவதா இல்லையா? பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் இறுதி முடிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியல்லாத, அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் தனியாக மே தின கூட்டத்தை நடத்தவுள்ளமை தற்போது ஆளும் கட்சிக்குள் பெரிதாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மே தின கூட்டத்தை இணைந்து நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் கடந்த வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய கூட்டம் தொடர்பாகவும் அரசாங்கத்திற்குள் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறிய கட்சி தனித்து மே தின கூட்டங்களை நடத்த ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து மே தின கூட்டத்தை நடத்தும் தேவை ஏற்பட்டால், அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பு ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
