அபிவிருத்தி வேலையினை அனைத்து கிராமங்களுக்கும் பங்கீடு செய்து கொடுக்க வேண்டும்
பிரதேசத்திற்க்கு வருகின்ற அபிவிருத்தி, விரும்பிய ஒருசில கிராமங்களுக்கு செய்து பகடக்காய் காட்டுவதனை விட அபிவிருத்தி வேலையினை அனைத்து கிராமங்களுக்கும் பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசபையின் 47 வது அமர்வு இன்று காலை சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான முதலாவது சபையின் அமர்வின் ஆரம்பத்தில் அனைவருக்கும் தவிசாளரினால் புதுவருட வாழ்த்துக்களையும் தைப்பொங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
தவிசாளரினால் 2021ஆண்டுக்கான46 வது அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அறிக்கையினை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
நாட்டில் பருவப்பெயச்சி மழையினால், வெள்ள நீரினால் பழுகாமம், முனைத்தீவு, பட்டாபுரம் கோவில், போரதீவு ஆகிய கிராமங்கள் வெள்ள நீரினால் தாழ்ந்துள்ளது.
வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர்பிலும் பிரதேச சபையினால் கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி, திண்மக்கழிவுகள் எடுத்தல், மரணம் ஏற்பட்டால் இலவச அமரர் ஊர்தி சேவைவழங்கள், தெரு விளக்கு போடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படுவது குறித்து இங்கு தவிசாளரினால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபையானது வருமானம் வருவது குறைவாக இருந்தாலும் மக்களுக்கு சேவையினை ஒழுங்கான முறையில் செய்து வருகின்றது. அந்த வகையில் குடிநீர் வினியோகம் இல்லாத கிராமங்களுக்கு சபையின் வாகனங்கள் மூலம் நீர் குழாய் கொண்டு செல்வதற்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றோம் எனவும் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
இன்றைய அமர்வில் போரதீவுப்பற்று உப தவிசாளர் நா.தருமலிங்கத்தினால் தனது தும்பபங்கேனி வட்டாரத்தில் உள்ள சுரவனையடியூற்று கிராமத்தில் அரசார்பற்ற நிறுவனத்தினால் கட்டப்பட்ட குடிநீர் வினியோக தாங்கியும் அதற்கான தளபாட பொருட்களை பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட கட்டடத்தினையும் அந்த நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வெளியேறும் போது போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு வழங்கியுள்ளது.
தற்போது பின்தங்கிய கிராமமான சுரவனையடியூற்று கிராம பாலர் பாடசாலை மாணவர்கள், அயல் கிராமமான தும்பங்கேனி கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஆகவே நாங்கள் குறித்த கட்டிடத்தினை பாலர் பாடசாலையாக பராமரித்து வருவதனால் பாடசாலைக்கு தளபாடம், குடிநீ,ர் மலசல கூடவசதி செய்து தருமாறு கோரும் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
இதற்கு தவிசாளரினால் கட்டடத்துக்குரிய தகுந்த ஆதாரத்தினை பெற்ற பின் சபையினால் வழங்க சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டது. பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரனால் பழுகாம வட்டாரத்தில் மட்டக்களப்பு மாவட்ட பெரமுன கட்சி அமைப்பாளர் சந்திரகுமாரவினால் ஒதுக்கப்பட்ட நீதி ஒதுக்கிட்டு மூலம் பழுகாமம் விபுலானந்த புரத்தில் 95 வீதமான வீதிகள் பூர்த்தியாகியுள்ளனர்.
மலசல கூடமும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்துள்ளார்.
முனைத்தீவு வட்டார உறுப்பினர் சுகிதனால் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் 43 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் இருக்கின்றது. பிரதேசத்திற்க்கு வருகின்ற அபிவிருத்தி விரும்பிய ஒருசில கிராமங்களுக்கு செய்து பகடக்காய் காட்டுவதனை விட அபிவிருத்தி வேலையினை அனைத்து கிராமங்களுக்கும் பங்கீடு செய்து கொடுக்க வேண்டும். கடந்த நல்லாச்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வேலைத்திட்டம் அனைத்தும் அனைத்து கிராமங்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
