காணி அபகரிப்பு விவகாரம்! மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல்
திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று(9) முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம் என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.
வழக்கு தாக்கல்
அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம். காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம். கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த காணியை ஆக்கிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வனின் பெயரையும், வன்னி நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரனின் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு முன்னால் தெரிவித்திருந்தார்கள்.
விசாரணை
அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன. அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம்.
அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவதற்காக இந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார்.
நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம். எமது நிலங்களை அரச திணைக்களங்களுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள்.
காணி உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
