வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மீது மாநகரசபை வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேயர் தலைமையில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், வவுனியா மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் மாநகரசபையில் பிரச்சன்னமாகியிருந்தனர்.
இதன்போது மாநகர சபையால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்தும் நபர் அங்கு வருகை தந்து மாநகரசபை உறுப்பினர்கள் சிலருடன் தனது வியாபார நிலையம் தொடர்பில் பேசியுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
அப்போது அவ்விடத்தில் நின்ற வவுனியா மாநகரசபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸுடன், மாநகரசபையால் வழங்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தனது ஏசி பூட்டிய வர்த்தக நிலையத்தை ஏன் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கூறி முரண்பட்டுள்ளதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி குறித்த மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏனைய சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களால் குறித்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் மாநகர மேயர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சபை உறுப்பினர்கள் சென்ற நிலையில் மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரும் தன் மீது மாநகரசபை உறுப்பினர் தாக்குதல் நடத்தியதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
